இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு!
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை நேற்று (03) குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து சில உணவுகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய சோற்றுப்பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலைக் குறைப்பு
அத்துடன், தேநீர், பால் தேநீர், மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாயால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று (03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, லிட்ரோ எரிவாயு 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாயாகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாயால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாயால் குறைக்கப்பட்டு 835 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு12.5 கிலோ சிலிண்டரின் விலை 1,280 ரூபாயால் குறைக்கப்பட்டு 4965 ரூபாயாகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை 512 ரூபாயால் குறைக்கப்பட்டு 1,988 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்