எரிவாயு தட்டுப்பாடு - வவுனியாவில் பூட்டப்பட்ட சைவ உணவகங்கள் - பலர் வேலை இழப்பு
srilanka
vavuniya
restaurant
gas shortage
By Sumithiran
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரில் இயங்கி வந்த முன்னணி சைவ உணவகங்கள் மூன்று இன்று முதல் மூடப்பட்டுள்ளன .
இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
எரிபொருள் தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றபோதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது .
இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை . எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்களை மூடவேண்டிய நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி