எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் இராணுவ பாதுகாப்பை வழங்க கோரிக்கை
Sri Lanka Army
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக நேற்று (31) பிற்பகல் பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றிய இராணுவத்தினர் மீள அனுப்பப்பட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சண்டித்தனம் புரிந்தவர்கள் கைது
அண்மைய நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சண்டித்தனம் புரிந்த 13 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
