எரிவாயு அடுப்பு வெடிப்பு விவகாரம்! சட்ட உதவிகள் இலவசம் - எதிரணி எடுத்துள்ள அதிரடி முடிவு
நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்றும் அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தரம் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும் தரமற்ற ஆட்சியை அகற்றுவதே மேற்கொள்ள வேண்டிய விடயம்.
தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பெரும் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாய சமூகத்தின் வாழ்க்கையையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்