நாளை முதல் சந்தைக்கு வருகிறது எரிவாயு
சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நிபந்தனைகளின் கீழ் குறித்த கொள்கலன்கள் விநியோகம் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த பல நாட்களாக எரிவாயுவுடன் தொடர்பான பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.
இதனால், நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.
நேற்று முன்தினம் (2) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதனை அடுத்தே மூன்று நிபந்தனைகளின் கீழ் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.