காசா போர் நிறுத்தத்தில் ஏற்படும் தாமதம்: அதிகரிக்கும் பதற்றம்
காசாவில் (Gaza) போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படாவிட்டால் இஸ்ரேலுக்கும் (Israel) லெபனான் (Lebanon) எல்லையில் மோதல்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, காசாவில் தற்போதைய மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) லெபனானுடன் ஒரு புதிய மோதலைத் தொடங்கலாம் என குறித்த ஊடகத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், காசாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் அண்டை பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய அவர் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து சர்வதேச சமூகத்தினரிடையே பரவலான உடன்பாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர்
இந்த நிலையில், தற்போதைய மோதலில் போர் நிறுத்தத்தை அடைவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய தடையாக இருப்பதாகவும் இஸ்ரேலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, போர்க்காலத்தில் நெதன்யாகு தன்னை ஒரு வலிமையான, தீர்க்கமான தலைவராகக் காட்டிக் கொள்வதால் அவருக்கான அங்கீகாரம் மற்றும் புகழ் என்பவை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, “போர்நிறுத்தத்தை நோக்கிய முக்கிய முயற்சிகளை நெதன்யாகு எதிர்க்கக்கூடும், ஏனெனில் அது அரசியல் ரீதியாக அவருக்கு நன்மை பயக்கும்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 21 மணி நேரம் முன்
