தாகத்தில் தவிக்கும் காசா சிறுவர்கள்
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள்.
தெற்கு காசாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளொன்றுக்கு வெறும்
கடந்த மாதம் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.
உலக சுகாதார மையம் பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தடை விதித்துள்ள இஸ்ரேல்
காசாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த ஒக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது.
அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காசா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |