பொறுப்புடன் பேசுங்கள் : சரத்பொன்சேகாவிற்கு பதிலடி
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நடத்திய போராட்டம் தொடர்பில் அதன் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தவிசாளரான சரத் பொன்சேகா கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை வெளியில் பேசுவதற்கு தகுதியற்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கட்சித் தவிசாளர் பொறுப்புடன் பேச வேண்டும்
“சரத் பொன்சேகா தவிசாளர். நீங்கள் உள்ளே அதைப் பற்றி பேச விரும்பினால், அதைப் பற்றி வெளியில் பேசுவதை நான் எதிர்க்கிறேன்.உங்களது கருத்துகள் சிலரை புண்படுத்துவதாக அறிக்கைகள் உள்ளன. சிலரை வெறுக்கத்தக்க வகையில் சில கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை நான் கண்டிக்கிறேன். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன். கட்சித் தவிசாளர் பொறுப்புடன் பேச வேண்டும்’’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |