வரலாற்று சாதனை படைக்கப்போகும் தமிழர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் வரலாற்று சாதனை படைப்பதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது 96 போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்தினால்
இந்நிலையில் நாளை தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஷ்வின் இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.
முதலிடத்தில் முரளிதரன்
முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
அஷ்வின் நாளை நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-ஆவது வீரர் என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்துவார்.
இதேபோன்று 500 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி விட்டால் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் ஏற்படுத்துவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |