தமிழகத்தை புறக்கணித்த நிர்மலா சீதாராமன் : பட்ஜட் தொடர்பில் விமர்சனம்!
தமிழக மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையின் படி அவர் தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும் அக்கறை கொள்ளவில்லை என ஸ்ராலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
புறக்கணிக்கப்பட்ட தமிழகம்
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, “தமிழகம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.
[
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்.
வெற்று அறிக்கை
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை. நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை.
எதிர்காலப் பயன்கள்
எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை“ என தெரிவித்துள்ளார்.
[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |