காசா மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு : இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்
காசாவின் (Gaza), வடபகுதியிலுள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சில முக்கிய சேவைகள் இடை நிறுத்தப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
குறித்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடே இதற்கு காரணமென அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும், குழந்தைகள் பிரிவிலுள்ள 11 குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO), எரிபொருள் மற்றும் மருந்துகளை கொண்ட ஒரு குழுவை வடக்கு காசா பகுதிக்கு அனுப்பியுள்ளது.
எனினும், அவர்கள் தற்பொழுது வரை இஸ்ரேலிலுள்ள சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு விரைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உயிரிழப்பு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஒக்டோபர் 7 முதல் சுமார் 33 மருத்துவமனைகள் சேவையில் இல்லாமல் இருப்பதாகவும், மீதமுள்ள மருத்துவமனைகளுக்கு, தினசரி 4,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |