இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்த ஊடகவியலாளர்கள்..! தீவிரமாக ஆராயும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல்களின்போது சர்வதேச ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த இடத்தில் நின்றமை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அது தொடர்பில் இஸ்ரேல் தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளது.
இத்தாக்குதலின் போதான காணொளிகளும், புகைப்படங்களும் வலைதளங்களில் உடனடியாகவே வெளிவந்தன.
ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது
இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.
A breaking expose by @HonestReporting reveals that three freelance journalists who work for major media outlets accompanied Hamas terrorists across the border on Oct 7, and reported from the horrific massacre.
— Israel ישראל ?? (@Israel) November 9, 2023
Here are a few examples from the report: https://t.co/Nj0SnRbmBW
ரொய்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் நியுயோர்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிகையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது.
அருகிலேயே இருந்து படம் பிடித்துள்ளதை
ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய இராணுவ தாங்கி ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது: ஒக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா
அந்த பத்திரிகையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
In the hours following our expose, new material is still coming to light concerning Gazan freelance journalist Hassan Eslaiah whom both AP & CNN used on Oct. 7.
— HonestReporting (@HonestReporting) November 8, 2023
Here he is pictured with Hamas leader and mastermind of the Oct. 7 massacre, Yahya Sinwar. https://t.co/S9pXeIGaFq pic.twitter.com/RmEZU5RsM8
இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. இதுவரை ரொய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.