ஏற்படப்போகும் பேரழிவு : இஸ்ரேலை கடுமையாக எச்சரிக்கும் உலகநாடுகள்
காஸாவின் தெற்கு எல்லையான ராபாவில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளமையானது அங்கு மனித பேரழிவையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்துமென பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளன.
ஜேர்மன்,கட்டார்,சவுதி ஆகிய நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
காஸா மக்கள் காற்றில் கரைந்து போகமாட்டார்கள்
ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக், “காஸா மக்கள் காற்றில் கரைந்து போகமாட்டார்கள். ராபாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மனித பேரழிவை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னர் காஸாவின் மற்ற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். ராபாவில் 80 சதவிகித மக்கள் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலின் இந்த முடிவு மக்கள் அடுத்து எங்கு செல்வது என்கிற கேள்வியை எழுப்பியது.
உடன்படிக்கையை மீறும் செயல்
எகிப்தின் எல்லை பகுதியான ராபாவிலிருந்து மக்களை இடம்பெயர கோரினால் எகிப்து நோக்கி அவர்கள் இடம்பெயரும் வாய்ப்பு உள்ளது. இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் 40 ஆண்டுகளாக இஸ்ரேல்-எகிப்து இடையே நிலவிவரும் உடன்படிக்கையை மீறும் செயல் எனவும் எகிப்து தெரிவித்துள்ளது.
மக்கள் எங்கு செல்வார்கள் என்கிற கேள்விக்கு நெதன்யாகு பதிலளித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, “ராபாவின் வடக்கு பகுதியில் நாங்கள் துப்புரவு செய்த இடங்கள் ஏராளமாக உள்ளன. விரிவான திட்டத்திற்கு செயலாற்றி கொண்டிருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |