ட்ரம்ப் தலைமையில் காசா அமைதி மாநாடு : எகிப்தில் குவியப்போகும் உலகத் தலைவர்கள்
எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று, எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நாளை(13) நடைபெறும் காஸா அமைதி உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.
உலகத் தலைவர்கள்
இந்த மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்து கொள்வார் என்று கூறுகிறார்.
பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்
மேலும், கடைசி ஒரு மணி நேரத்தில், பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உச்சிமாநாட்டில் இருப்பார் என்று அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்ஸியோஸ் தெரிவித்துள்ளது,
இருப்பினும், இந்த அமைதி முயற்சிக்கு சவால்கள் உள்ளன. பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ், ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட ட்ரம்பின் திட்டத்தில் உடன்பாடில்லாததால், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஆப்கானின் தலிபான் படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பேரிழப்பு :எல்லைப்பகுதியில் கடும் பதற்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
