பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவி: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி சர்வதேச நீதிமன்றத்தில்(International Court of Justice) நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.
குறித்த வழக்கானது நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இன்று(08) விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்போது, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.
வான்வழி விநியோகம்
ஒருபுறம் பலஸ்தீன சிறார்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம் அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளதாக மற்றுமொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட்(Alain Pellet) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை(08) தனது வாதத்தை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |