ரணில் தொடர்பில் நாளையதினம் வெளிவருகிறது வர்த்தமானி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது தொடர்பில் நாளையதினம் (ஜூன் 18) வர்த்தமானி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும், அதனுடன் தொடர்புடைய பெயர் வர்த்தமானி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சமீபத்தில் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட பெயர் நேற்று காலை கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவால் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ந
டைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவொரு ஆசனங்களையும் வெல்ல முடியவில்லை. யு.என்.பி வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்து ஒரே ஒரு தேசிய பட்டியல் இடத்தை மட்டுமே வென்றனர்.
எனினும், பொதுஜன பெரமுன கூட்டணி (யுபிஎஃப்ஏ) 145 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி(54) , தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் (டிஎன்ஏ) 1தேசிய மக்கள் சக்தி (பிபிபி) 3 இடங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.