பங்குகள் மற்றும் பத்திரங்கள் குறித்து வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி!
பணவியல், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் குறித்த உத்தரவுகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த வாரம் அமைச்சர்கள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 28 ஆம் திகதிக்குள் வைத்திருக்கும் பங்குகள் அல்லது பத்திரங்களை மாற்றுவதற்கு உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரம்

அத்துடன், அமைச்சின் செயலாளரும் பொதுக் கடன் ஆணையமும் வட்டி செலுத்துதல், மாற்றுதல் அல்லது கருவூலப் பத்திரங்களுக்குப் பரிமாற்றம் செய்வதற்கான முறையைத் தயாரிக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
மேலும் , திறைசேரிப் பத்திரங்களை தயாரித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றின் போது ஏற்படும் எந்தவொரு செலவினத்தையும் செலுத்துவதற்கு திறைசேரி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கான அதிகாரமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்