வாகனங்களை விடுவிப்பதில் இருந்த தடை நீக்கம் : வெளியானது அதிவிசேட வர்த்தமானி
ஜப்பானிலிருந்து (Japan) இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (19) வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வாகனங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான பரிசோதனை உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் பணியகத்துக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
அத்துடன் வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஜப்பானின் ஏற்றுமதி பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு அந்த வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜப்பான் உள்ளிட்ட சகல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பரிசோதனை சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் வகையிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பம் மெரஞ்சிகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
