தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து, விசேட நோக்க வாகனங்கள், வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பாக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி வாகனங்கள்
அண்மையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |