ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் ஆணையகம் விடுத்த விசேட அறிவித்தல்
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.
அதேவேளை, விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிபந்தனைகள் தொடர்பில் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வசதியற்ற ஆசிரியர்கள்
அதேவேளை, இணைய வசதியற்ற ஆசிரியர்கள் 011 2 785 231 அல்லது 011 2 785 216 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.