மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த சில நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடைகளால் மன அழுத்தம்
நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களை அண்மித்த பாடசாலைகள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் தடைப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ஆம் தர மாணவர்களுக்காக டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பப் பரீட்சையும் மறு அறிவித்தல் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரமங்கள் மற்றும் தடைகளால் மன அழுத்தத்தில் உள்ள இந்த நேரத்தில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இந்திகா லியனகே மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்