பரீட்சை கண்காணிப்புக் கடமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆசிரியர்..!
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் சிலருக்கு வினாத்தாள்களுக்கான விடை எழுத உதவியதாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பரீட்சை கண்காணிப்புக் கடமையிலிருந்து இன்று (01) நீக்கப்பட்டதாக வடமத்திய மாகாண பரீட்சைகள் பணிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரியங்கர தெரிவித்தார்.
அனுராதபுரம் கருக்கன்குளம் விஜயபா வித்தியாலயத்தில் பரீட்சை கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பரீட்சை கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் கருக்கன்குளம் பகுதியில் பிரத்தியோக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் முறைபாடு

தனது பிரத்தியோக வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு விடை எழுத உதவி செய்வதாக பெற்றோர்கள் மேற்கொண்ட முறைபாட்டிற்கு அமைய கடமையில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக வடமத்திய மாகாண பரீட்சைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.