பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இந்த மாதத்திற்குள் உயர்தர பரீட்சையின் (GCE AL exam) பெறுபேறுகளை வெளியிட முடியும் என ன பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara - Department of examinations) தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தில் ( Department of examinations) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
உயர்தர பரீட்சையின் பெறுபேறு
அதேவேளை, நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் சில பாடங்கள் தொடர்பில் செயன்முறைப் பரீட்சைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூன்று கட்டங்களாக பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் விரைவாக பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள், செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |