இணைய வழி மூலம் இரத்தினக்கல் விற்பனை! இலங்கையில் புதிய நடைமுறை
Sri Lanka
Today Gold Price
Economy of Sri Lanka
By pavan
இலங்கையில் உள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்களை இணைய வழி மூலம் சர்வதேச சந்தைக்கு விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 3 ஆயிரம் டொலர்கள் பெறுமதி வரையான இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்களை இவ்வாறன முறையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பிருந்த காலப்பகுதியில் 300 அமெரிக்க டொலர்களாக இத்தொகை வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விற்பனை விபரம்
மேலும், கொழும்புக்கு வருகை தராமல் பிரதான தபால் நிலையங்கள் ஊடாக சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்த பின்னர், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண இணையத்தளத்தின் ஊடாக தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
