சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவ தளபதி
Colombo
SJB
Sajith Premadasa
By Sumithiran
ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்துள்ளார்.
இன்று (ஜனவரி 29) எதிர்க்கட்சி தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஓய்வுபெற்ற ஜெனரல், ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வழங்கினார்.
பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.
தயா ரத்நாயக்க முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி