பொதுத் தேர்தலில் இருந்து சிறீதரனை ஒதுங்க சொன்ன சுமந்திரன்
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்கு பின்னர் தேர்தலிலே தோற்றவர்களுக்கு இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்ற தீர்மானம் மத்திய செயற்குழு கூட்டத்தில் இன்று உறுதி செய்யப்பட்டதாக தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று (05) வவுனியாவில் கூடிய நிலையில், அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த தீர்மானத்தின் படி, அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள் என்றும் ஆனால் சிறீதரனை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் சிறீதரனுக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன்.
எனினும் சிறீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை."
மேலும் அவர் கூறிய விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |