சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்
தமிழரசுக்கட்சியில் யாழ் மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் (S.Srithran) பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரின் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றையதினம் (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக சிறீதரன், மாவை சேனாதிராஐா, சிறிநேசனுக்கு ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழரசு கட்சியினுடைய மத்திய கொள்கை முடிவுகளை அவர்கள் மீறியுள்ளார்கள் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியுள்ளார்.
இதனால் தமிழரசுக் கட்சியில் குழப்பம் நீடித்து வருகின்றது. அதனால் தேர்தலுக்குப் பின்னர் நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும்.
இதற்கமைய, ஒழுக்காற்று விசாரணையின் ஊடாக அனேகமானோர் ஓரங்கட்டப்பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் வேட்பாளராக உள்வாங்கப்பட்டிருக்கிறார்.
இது சுமந்திரனின் திட்டமாக கூட இருக்க முடியும், எனவே சிறீதரன் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு ஒழுக்காற்று விசாரணை மூலமாக அதைக் கிடைக்காமல் செய்யக்கூடும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |