பொதுத் தேர்தல் : இலங்கைக்கு வரவுள்ள கண்காணிப்பு குழு
இலங்கையின் பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் (Asian Network for Free Elections) முதலாவது குழு எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே கண்காணிப்பு குழு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில் குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வருவார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு
மேலும், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் (Commonwealth Observer) தொடர்ந்தும் நாட்டிலேயே தங்கியுள்ளன.
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்களுடன் மேலதிக ஒரு குழுவும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக கபே (Cafee) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |