2024 பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர் அடையாள அட்டைகள் தங்கள் சொத்து மற்றும் கடன்களை அறிவித்த வேட்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கணினி மூலம் தயாரிக்கப்பட்ட வேட்பாளர் அடையாள அட்டை தடிப்பான தாளில் அச்சிடப்பட்டு, புகைப்படம் ஒட்டிய பின், ஒவ்வொரு வேட்பாளருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அறிவிப்பு
இம்முறை வேட்பாளர் அடையாள அட்டையின் மேற்பகுதியில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் 1 1/4 அங்குலத்தில் வண்ணம் அல்லது கறுப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தின் இரண்டு பிரதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் குழுத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டையின் புகைப்பட நகலையும் கொண்டு வருமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கும், வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்கும் வசதியாக இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறதாகவும் தேர்தல் ஆணையத் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |