தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை! தமிழர் சம உரிமை இயக்கம்

Sri Lankan Tamils Sri Lanka General Election 2024
By Harrish Oct 14, 2024 02:25 PM GMT
Report

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் இதுவரை கிடைக்காத நிலையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குள் அள்ளுண்டுபோக தமிழ் மக்கள் விரும்பவில்லை என  தமிழர் சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தூய மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடும் தமிழர் சமஉரிமை இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

தமிழர் தரப்பின் கையறு நிலை

கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான த.நிகேதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வழிப்படுத்தலில் மாற்றத்திற்கான தமிழ் தேசிய சக்தியாக தமிழ் தேசிய தளத்தில் மக்கள் வாழ்வியலை மேம்படுத்தவே நாம் களம் கண்டுள்ளோம்.

தூய மாற்றத்திற்கான தமிழ் தேசிய களத்தில் தமிழர் சம உரிமை இயக்கத்தினர் யாழில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும் சுயாதீனமாக போட்டியிடுகின்றனர்.

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை! தமிழர் சம உரிமை இயக்கம் | General Election Sri Lanka 2024 Tamil Jaffna

தமிழ் மக்கள் யுத்தத்திற்கு பின்னரான 15 ஆண்டுகளில் தற்போது களத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளையும் நம்பி களைத்து விட்டனர்.

நாம் இதுவரை வாக்களித்து தெரிவுசெய்தவர்கள் தங்களுக்குள் அடிபடுவதிலும் சுகபோகங்களை அனுபவிப்பதிலும் அதனை விட மதுபான சாலை அனுமதி பெற்று மக்களை போதைக்கு அடிமையாக்கி இளையோரை அழிக்க துணை போகின்றனரே அன்றி மக்களுக்கான எந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

தமிழர் தரப்பின் இந்த கையறு நிலையில் தெற்கில் மாற்றத்தை எற்படுத்தியோர் வடக்கிலும் காலூன்ற முனைகின்றனர்.

தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி

தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகளை சமஷ்டி முறை இணைந்த வடகிழக்கு மாநிலமோ சம உரிமைகளோ இன்னும் கிடைக்காத நிலையில், தெற்கின் அலையில் அள்ளுண்டு போக தமிழ் மக்கள் விரும்பவில்லை.

காலத்தின் தேவை கருதி குறுகிய அவகாசம் இருப்பினும் மாற்றத்திற்கான தூய பொது முகங்களாக சமூகத்தின் சகல தளங்களிலிருந்து தமிழ் தேசிய மனிதநேயச் செயற்பாட்டாளர்களான நிபுணர்களும் பெண்களும் இளையவர்களும் தியாக வேள்வியில் இளமைக்காலத்தை அரப்பணித்த தமிழ் தேசிய போராளிகள் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை! தமிழர் சம உரிமை இயக்கம் | General Election Sri Lanka 2024 Tamil Jaffna

தொகுதிவாரியாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் நிறுத்தப்பட்டுள்ள எமது பொது முகங்களான முதன்மை வேட்பாளர் கல்வியியலாளர் கலாநிதி தே.தேவானந்த், ஊடகவியலாளர் ந. பொன்ராசா, சட்டத்தரணி ஜெ. நீலலோஜினி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்னாள் உப அதிபர் அ.சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர் குழாம் யாழில் பசு சின்னத்திலும், தமிழ் தேசிய போராளி முல்லை ஆனந்தன், முல்லையின் பட்டதாரி இளைஞர் கோகுலன், வன்னி மாற்றுத்திறனாளிகள் சங்க வவுனியா உபதலைவர் சாந்தகுமார், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு சங்க மன்னார் செயலாளர் பாமினி உள்ளிட்ட குழாமினர் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

இவர்களை ஆதரித்து தமிழ்த் தேசிய மறுமலர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டுகின்றோம். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் : பயணிகள் அதிர்ச்சி

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் : பயணிகள் அதிர்ச்சி

அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா

27 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
அகாலமரணம்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், London, United Kingdom

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Bromley, United Kingdom, Tolworth, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை, உரும்பிராய் தெற்கு

12 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024