முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்பட வேண்டும்:பசில் தெரிவிப்பு
நடைபெறவுள்ள தேர்தல்களில் பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று(07) சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்
எனினும், முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)முனைப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் ரணிலை பசில் ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச கட்சி
பொதுஜன முன்னணியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதனை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்நோக்க ஆயத்தமாகுமாறு பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |