உக்ரைன் போரால் ஜெனிவாவில் தப்புமா இலங்கை?
srilanka
geneva
ukraine war
By Sumithiran
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையினால் உருவாகியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இராணுவநடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும்.
இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்புநாடுகளில் 29நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன
