ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றம் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அங்கீகாரம்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் அந்நாட்டின் சுயாதீன செனட் சபை உறுப்பினர் லிடியா தோர்ப்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஆதரித்தும் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை அங்கீகரித்தும் அறிக்கை ஒன்றையும் வாசித்துள்ளார்.
இனப்படுகொலைக் குற்றங்கள்
2009 இல் சிறிலங்கா அரசு செய்த குற்றங்கள், தற்போது ஈழத் தமிழர்களை பாதிக்கும் பாரிய கொடுமைகள் குறித்தும் அவர் பேசினார்.
அகதிகளுக்கு எதிரான சித்திரவதை வடிவங்களையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றங்களில் சிறிலங்கா மெத்தனமாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வலிமிகுந்த மாதத்தில் இந்த அறிக்கையை வாசித்ததற்காக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் லிடியா தோர்ப்பிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
