காசா மீதான இனப்படுகொலை: தென்னாபிரிக்கா வழக்கு
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் தீர்ப்பை அறிவிப்பதற்கு சில வாரங்கள் ஆகும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியை முற்றாக அழித்து வருவதாகவும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதாகவும், பெருமளவிலான சொத்துக்களை அழித்து காசா பகுதியின் சுதந்திரத்தை மீறுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த இஸ்ரேல், இது ஆதாரமற்றது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.