ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்
தமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குதற்கான ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகின்றது.
இவ்வாறான எதிர் நிலைப்பாடுகளுக்கு சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனின் (M. A. Sumanthiran) தனிப்பட்ட முடிவுகளும் கூட காரணமாக அமைந்துள்ளது.
காரணம், நடந்து முடிந்த தேர்தலில் சுமந்திரனால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களைதான் தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள்.
இதுவே ஒரு பொதுவான நிலைப்பாட்டில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் தமிழர் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என்ற சாயல் அங்கு இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும்.
சர்வதேசமும் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய மக்கள் வெற்றி பெற்றது என்ற சாயலை தமிழர் தரப்பில் பூசாமல் இருந்திருக்கும்.
இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதாவும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பிலும், சர்வதேசத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் ஐ.நாவில் தமிழ் மக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் பலதரப்ட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திக்கு அப்பால் நிகழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
