வவுனியாவில் விபத்தில் சிக்கிய ஜேர்மன் பிரஜைக்கு நேர்ந்த கதி
வவுனியாவில் (Vavuniya) விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (19) கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வவுனியா கனகரயான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்து சம்பவத்துள்ளது.
இதன்போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் வந்த வெளிநாட்டவர் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரவூர்தியின் சாரதி
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வெளிநாட்டவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
