இரவு நேர வேலைப்பழு: நோயாளிகளை படுகொலை செய்த தாதி
ஜேர்மனியில் நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக தாதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊர்செலன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தாதி 2020 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.
வேலைப் பழு
இந்தநிலையில், இரவு நேரப் பணியில் இருந்த போது தனக்கு வேலைப் பழு அதிகமாக இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, 2023 டிசம்பர் முதல் 2024 மே வரை இவர் பத்து நோயாளிகளைக் கொலை செய்துள்ளார்.

அத்தோடு, 27 பேரைக் கொல்ல முயற்சி செய்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வழக்கின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட தாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை
இந்த ஆயுள் தண்டனையில், அவர் 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

உயிரிழந்த மற்ற நோயாளிகளின் உடல்களைத் தற்போது தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் மூலம், அவர் மேலும் பல கொலைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |