ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும் போது அவர் துரதிர்ஷ்டவசமான குறித்த விபத்தை சந்தித்துள்ளார்.
அவர் லைலா மலையின் உச்சியில் இருந்தபோது சுமார் 5,700 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை
இருப்பினும், அன்றைய தினம் மோசமான வானிலை மற்றும் இருள் காரணமாக, மறுநாள் காலை வரை மீட்பு உலங்குவானூர்தியால் சலத்தை அடைய முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்று (30) காலை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், விபத்து நடந்த திங்கட்கிழமை அவர் இறந்திருக்க வேண்டும் என்று மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பயத்லான் தடகள வீரர்
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் மலையேறுபவர்களும் மீட்புப் பணியில் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.
31 வயதான லாரா டோல்மேயர், ஒரு சிறந்த பயத்லான் தடகள வீரர், அவர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஐந்து உலக சாம்பியன்ஷிப்கள் மற்றும் ஏழு உலகக் கோப்பைகளில் ஜெர்மனியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
