எரிபொருள் விலையின் எதிரொலி : பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தினால் பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (01.08.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளர்.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இந்த ஆண்டு எரிபொருள் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31.07.2025) அறிவித்தது.
பேருந்து கட்டணம்
அதன்படி, ஒரு லிட்டர் லங்கா ஓட்டோ டீசல் ரூ. 289க்கும், ஒரு லிட்டர் சூப்பர் டீசல் ரூ. 325க்கும், ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோல் ரூ. 305க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
மேலும், ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ. 341க்கும், ஒரு லிட்டர் லங்கா மண்ணெண்ணெய் ரூ. 185க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேபோல், லங்கா ஐஓசி நிறுவனமும் ஒகஸ்ட் மாதத்திற்கான எந்த விலை திருத்தங்களையும் செய்யாது என்று தெரிவித்துள்ளது.
கடைசியாக ஜூலை மாதம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது, ஆனால் ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
