ஜேர்மன் ஜனாதிபதியின் உக்ரைன் விஜயத்துக்கு மத்தியில் கிவ் நகரை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் முக்கிய பாலங்கள் மீது தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நகரின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி இன்று Pivnichnyi (Northern) Bridge மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தப் பாலம் தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
தாக்கப்பட்டதாக செய்தி
இதற்கு முன்னதாக, இந்த வாரத்தில் Pivdennyi (Southern) Bridge பல தடவைகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் ஜனாதிபதி Friedrich Merz, ரஷ்யாவின் தொடர்ச்சியான முழுமையான படையெடுப்புக்கு எதிரான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், எதிர்பாராத விஜயமாக கீவ் நகருக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த சமீபத்திய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கீவ் மற்றும் உக்ரைனின் ஏனைய பகுதிகள் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படையினரை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு பால்களையும் தாங்கள் தாக்கியதாக ரஷ்யா முன்னதாக தெரிவித்திருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |