அமெரிக்காவை போல் நாடுகடத்த தீர்மானித்துள்ள மற்றுமொரு நாடு
அமெரிக்காவை (US) போல நான்கு பேரை நாடுகடத்த ஜேர்மனி (Germany) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்கர் ஒருவர் உட்பட நான்கு பேரை தேசிய அபாயம் இருப்பதாக கூறி நாடு கடத்த ஜெர்மன் அரசு தீர்மானித்துள்ளது
அந்த வகையில், நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டவர்களில் ஒரு அமெரிக்கர், ஒரு போலந்து நாட்டவர் மற்றும் இரு அயர்லாந்து நாட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனிய அரசின் தீர்மானம்
இந்நிலையில், அவர்கள் நான்கு பேரும் இந்த மாதத்திற்குள் ஜேர்மனியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மூன்று ஆண்டுகளுக்கு ஜேர்மனிக்குள் நுழையவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நான்கு பேரும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்றதற்காகவே நாடுகடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜேர்மனியைப் பொருத்தவரை, இப்படி எந்த விசாரணையும் இன்றி நாடுகடத்தும் வழக்கம் இதுவரை இல்லை என்பதால், தற்போது எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
