இஸ்ரேல் - ஈரான் மோதலில் உள்நுழையும் புதிய நாடு
இஸ்ரேல் (Israel) மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜி7 அமைப்பிடமிருந்து உரிய பதில் கிடைக்க வேண்டும் என ஜேர்மனியின் (German) வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை ஜி7 அமைப்புடன் இத்தாலியில் (Italy) இடம்பெற்ற கூட்டத்தில் விவாதித்தது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "ஈரானின் இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலளிக்க வேண்டும்.
தாக்குதல்கள்
ஏனென்றால் நாங்கள் ஜி7 அமைப்பில் இஸ்ரேல் மற்றும் ஈரான் தாக்குதல்கள் குறித்து கூடுதலாக விவாதித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
இந்நிலைமை மேலும் அதிகரித்தால் இரு நாட்டு மக்களுக்கும் ஆபத்து” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த புதன்கிழமை(10) இஸ்ரேல் தானாக ஒரு பாரிய தாக்குதலை மேற்கொள்ளாது என ஜேர்மனியின் சான்சிலரான ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |