உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்

Singapore World Tokyo
By Shalini Balachandran Apr 18, 2024 12:40 PM GMT
Report

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்(Hamad International Airport) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்(Singapore Changi Airport) அந்த அந்தஸ்தை இழந்து தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) நேற்று(17) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில்(Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஈரான் அதிபரின் வருகை: இஸ்ரேல் - இலங்கை விமான சேவைகள் நிறுத்தம்

ஈரான் அதிபரின் வருகை: இஸ்ரேல் - இலங்கை விமான சேவைகள் நிறுத்தம்

 சர்வதேச விமான நிலையம் 

இதில் தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதல் இடத்திலும் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர் | List Of Best Airports In The World

தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம்(Incheon International Airport) மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம்(Haneda Airport) நான்காவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சாங்கி இரண்டாவது இடத்தில் வந்தாலும் ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையம் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவைகளை வழங்கும் விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

சிறந்த விமான நிலைய விருது

உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக விளங்கும் சாங்கி விமான நிலையமானது உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையமாவதோடு நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள் மற்றும் திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது.

அத்தோடு லாஸா விடுதி இங்கு உள்ளதுடன் 1981 இல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருவதுடன் இங்கு மூன்று முனையங்கள் உள்ளன.

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர் | List Of Best Airports In The World

இதனுடன் சாங்கி விமான நிலையம் 2023 இல் சிறந்த விமான நிலைய விருதை வென்றதுடன் முதல் பட்டியலில் நான்கு இந்திய விமான நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.

டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் மும்பை விமான நிலையம் 95 ஆவது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 59 ஆவது இடத்திலும் மற்றும் ஹைதராபாத் விமான நிலையம் 61 ஆவது இடத்திற்க்கும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா

2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பின்வருமாறு:

  1. தோஹா - ஹமாத் விமான நிலையம்
  2. சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையம்
  3. சியோல் - இன்சியான் விமான நிலையம்
  4. டோக்கியோ - ஹனேடா விமான நிலையம்
  5. டோக்கியோ - நரிடா விமான நிலையம்
  6. பாரிஸ் - சார்லஸ் டி கோல் விமான நிலையம்
  7. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - துபாய் விமான நிலையம்
  8. ஜெர்மனி - முனிச் விமான நிலையம்
  9. ஸ்விட்சர்லாந்து - சூரிச் விமான நிலையம்
  10. துருக்கி - இஸ்தான்புல் விமான நிலையம்
  11. ஹாங்காங்
  12. ரோம் ஃபியூமிசினோ
  13. வியன்னா
  14. ஹெல்சின்கி-வான்டா
  15. மாட்ரிட் - பராஜாஸ்
  16. சென்ட்ரேர் நகோயா
  17. வான்கூவர்
  18. கன்சாய்
  19. மெல்போர்ன்
  20. கோபன்ஹேகன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016