தேர்தலுக்கு தயாராகுங்கள் அமைச்சர்களுக்கு ரணில் அறிவிப்பு
Colombo
Ranil Wickremesinghe
Election
By Jaso
அதிபர் தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனவே முதலில் அதிபர் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் அறிவித்துள்ளார். கொழும்பு அதிபர் அலுவலகத்தில் அதிபர் தலைமையில் அமைச்சரவை கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அதிபர் தேர்தல்
அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி