சிறுமி துஷ்பிரயோகம் கசிப்பு வியாபாரி கைது
Sri Lanka Police
Sexual harassment
By Sumithiran
பதுளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெவெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பதுளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, 48 வயதான குறித்த பகுதியைச் சேர்ந்த கசிப்பு வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக கசிப்பு வர்த்தகத்தில்
சந்தேக நபர் மிக நீண்ட காலமாக வெவெஸ்த்த நடுப்பிரிவு பகுதியில் கசிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாக
பதுளை காவல்துறையினர்
தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி