முள்ளம்பன்றி எப்படி இலங்கைச் சிறுமியின் நண்பனானது - வைரல் காணொளியின் கதை

Viral Video Srilankan Tamil News Social Media
By Thulsi Jul 04, 2026 06:32 AM GMT
Report

முள்ளம்பன்றி மற்றும் பூனையுடன் நெல் வயல் வழியாக நடந்து செல்லும் சிறுமியின் மனதை நெகிழ வைக்கும் வைரல் காணொளி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இளம் சிறுமிக்கும் அவளது செல்ல முள்ளம்பன்றிக்கும் இடையிலான நெகிழ்ச்சியான  இந்த மனதைத் தொடும் கதை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இந்தக் காணொளி பங்களாதேஷ் நாட்டில் படமாக்கப்பட்டது என்ற தவறான கூற்றுக்களுடன் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டாலும், உண்மையில் இது இலங்கையில் பதிவு செய்யப்பட்டது.

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

தனித்துவமான பாசப் பிணைப்பு 

ஒரு சிறுமி நெல் வயல் வழியாக நடந்து செல்ல, ஒரு சிறிய முள்ளம்பன்றி அச்சமின்றி அவளை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான அசாதாரணமான பிணைப்பை வெளிப்படுத்தியது.

முள்ளம்பன்றி எப்படி இலங்கைச் சிறுமியின் நண்பனானது - வைரல் காணொளியின் கதை | Girl And Rescued Porcupine World Viral Video

காணொளியில் உள்ள சிறுமி, பொலன்னறுவையைச் சேர்ந்த ஏழு வயது ஸ்வேதா ஆவார்.

தென்னிலங்கை ஊடக குழவொன்று ஸ்வேதாவை அவரது வீட்டில் சந்தித்தபோது, ​​அவர் அன்புடன் பராமரித்து வரும் பல விலங்குகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், அந்த சிறிய முள்ளம்பன்றி ஒரு நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்டதாக தெரிவித்துள்ளர்.

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்ட பிறகு, தகரக் குவியலுக்குள் ஒளிந்திருந்த முள்ளம்பன்றியை அவர்கள் கண்டதாக சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

பிறகு முள்ளம்பன்றி விலங்குகளால் துன்புறுவதைக் கண்ட ஸ்ரேஸ்தாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக அதை எடுத்துச் சென்று பராமரித்து குணப்படுத்தினர்.

குணமடைந்த பிறகு, அந்த முள்ளம்பன்றி காட்டுக்குத் திரும்பியது, ஆனால் தொடர்ந்து அந்தக் குடும்பத்தைச் சந்தித்து வந்தது.

மெஸ்ஸியின் அர்ஜென்டின அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய கேப் வெர்தே

மெஸ்ஸியின் அர்ஜென்டின அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய கேப் வெர்தே

தானாகவே திரும்பி வரும் முள்ளம்பன்றி

அன்று முதல், மீட்கப்பட்ட அந்த முள்ளம்பன்றி குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினராகி, அந்தச் சிறுமியுடன் ஒரு தனித்துவமான பாசப் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.   

முள்ளம்பன்றி எப்படி இலங்கைச் சிறுமியின் நண்பனானது - வைரல் காணொளியின் கதை | Girl And Rescued Porcupine World Viral Video  

ஸ்வேதாவின் குடும்பத்தினர் கூறுவதன்படி, அவளுக்கு விலங்குகள் மீது எப்போதுமே ஆழ்ந்த பாசம் உண்டு, மேலும் அவற்றுடன் ஒரு தனித்துவமான பிணைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

தங்கள் குடும்பம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்கள் இயற்கையால் சூழப்பட்டிருப்பதால், ஸ்வேதா வனவிலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் வளர முடிந்தது என்று அவளது தாய் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குடும்பத்தினர் முள்ளம்பன்றியைப் பிடித்து வைத்திருக்கவில்லை; அது காட்டில் சுதந்திரமாகத் திரியவும், தானாகவே திரும்பி வரவும் அனுமதிக்கின்றனர்

இக்கதை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நிலவக்கூடிய கருணை மற்றும் இரக்கத்தை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக விளங்குகிறது.

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் : கல்வி அமைச்சின் நடவடிக்கை

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் : கல்வி அமைச்சின் நடவடிக்கை



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026