மெஸ்ஸியின் அர்ஜென்டின அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய கேப் வெர்தே
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன.
இதில், அதிகாலை 3.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.
இப்போட்டியில் அர்ஜென்டினா தலைவர் லியோனல் மெஸ்ஸி புதிய உலகச் சாதனை படைத்துள்ளார்.
லியோனல் மெஸ்சி சாதனை
இன்றைய ஆட்டத்தின் மூலம் பிபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கோல் அடித்த ஒரே வீரர், 30 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் ஆகிய சாதனைகளை லியோனல் மெஸ்சி படைத்துள்ளார்.

வெறும் 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்தே, கால்பந்து உலகில் ஜாம்பவானாக திகழும் அர்ஜென்டினா அணிக்கு எதிராக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் இறுதியில் சொந்த கோல் காரணமாக தோல்வியை தழுவியது.
பிபா கால்பந்து ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் கேப் வெர்டேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
29-வது நிமிடத்தில் மெஸ்ஸியும், 92-வது நிமிடத்தில் மார்ட்டினஸும் அர்ஜென்டினாவுக்கு கோல் அடித்தனர்.
கேப் வெர்டே அணி 59 மற்றும் 103-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-2 என 90 நிமிடங்களைத் தாண்டி அர்ஜென்டினாவை மிரட்டியது.
போராடி வெற்றி
இறுதியாக 111-வது நிமிடத்தில் விழுந்த 'ஓன் கோல்' (Own Goal) மூலம் அர்ஜென்டினா போராடி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணி இந்தப் போட்டியில் தோல்வி பயத்தை கண்ட பின் தான் போராடி வென்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்