யாழில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் பெண் கைது..!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanna
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
30 வயது பெண்

நேற்றைய தினம் கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்ட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும் பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி