பிரான்ஸில் நாடுகடத்தப்படவுள்ள இலங்கையரை காப்பாற்ற துடிக்கும் காதலி
Sri Lanka
France
By Sumithiran
இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான குடு அஞ்சு என்பவர் அண்மையில் பிரான்ஸில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் அவரது காதலியான பிரான்ஸ் நாட்டு யுவதி சட்டக் குழுவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நீதிமன்றில் முற்படுத்தப்படும்போது
இந்நிலையில் குடு அஞ்சு எதிர்வரும் 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முற்படுத்தப்படும்போது அவர் சார்பாக இந்த சட்டத்தரணி குழு முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவருடன் சில காலமாக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் குடு அஞ்சு, இலங்கையை சேர்ந்த திருமணமான தனது மனைவியை விவாகரத்துக் கோரியுள்ளமை தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி