அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் கொடுப்போம்! செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

Tamil United Nations TNA SriLanka Selvam Adaikalanathan
By Chanakyan Jun 01, 2021 09:39 AM GMT
Report

ஐ.நாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுத் தொடரிலே வெளிவிவகார அமைச்சரை தமிழ் கட்சியில் எல்லோரும் சந்தித்து எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடினோம். ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இந்த கலந்து கொண்ட கட்சிகள் கையொப்பமிட்டு இது சம்பந்தமாக பேசுவதற்கான வாய்ப்பை கேட்டிருந்தோம்.

எங்களிடம் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து தன்னிடம் சொல்ல வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதியாக கலந்து கொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கூறியிருந்ததாக அவர் எங்களிடம் கூறியிருந்தார்.

அந்தவகையிலே எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விபரத்தையும் நாங்கள் கையளித்திருக்கிறோம். அவரிடம் உரையாடியிருக்கிறோம். அந்த வகையிலே ஜனாதிபதியோடு பேசி மீண்டும் ஜனாதிபதியோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றுத்தருவதாக அவர் கூறியிருக்கின்றார்.

அந்தவகையில் நாங்கள் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் சம்பந்தமாகவும், வெளியிலே அவர்களுடைய குடும்பங்கள் படு மோசமான ஒரு துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் எடுத்து கூறியிருக்கின்றோம்.

அடுத்ததாக முக்கியமாக இந்த கொரோனா தொற்று என்பது சிறைக்கூடங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக ஓரளவுக்காகவேனும் அவர்களை பிணையில் அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து இந்த அச்சு கொடுக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதும் ஏனையவர்களுக்கு பிணை அடிப்படையில் பேசினோம்.

இருந்தாலும் அனைவரையும் விடுதலை செய்வது நன்றாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய பொதுவான விடயமாக இருந்தது. இந்த கலந்துரையாடல் மிக நேர்த்தியான முறையிலே நடைபெற்றது. இதற்கு அரசியல் கைதிகளுடைய குடும்பங்கள் வரவேற்பு செய்திருக்கிறார்கள். அந்தவகையிலே நாங்கள் அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக அடுத்த ஜனாதிபதி சந்திப்பிலே ஒற்றுமையாக சென்று குறித்த விடயம் சம்பந்தமாக பேச இருக்கிறோம்.

இலங்கை அரசானது ஐநா சபையினுடைய தீர்மானத்திலே இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலை சம்பந்தமாக கூறப்பட்டிருக்கிறது. அந்தவகையிலே நாங்கள் ஏற்கனவே இந்த மகஜர்களை உயர்ஸ்தானியங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இப்பொழுது அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கொடுத்திருக்கிறோம்.

ஐ.நா சபையிலே இந்த வழக்கினுடைய பின்னணி என்ன? அல்லது வழக்குகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னென்ன கட்டங்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை நாங்கள் நிச்சயமாக சாட்சிகளோடு, அங்கே சொல்ல வேண்டும்.

இந்த விடுதலை சம்பந்தமான ஒரு நிலைப்பாடு அதிலே இருக்கின்றபடியால் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்தவகையிலே நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கான விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும், கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினார். இதன் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக இராணுவ அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025